செல்போன் கடை உரிமையாளர் தற்கொலை


செல்போன் கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 2:02 AM IST (Updated: 5 May 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது 2 பேரும் நட்பாக பழகியது காதலாக மாறியது. பாண்டியன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதுபற்றி காதலர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் மாப்பிள்ளையை தேர்வு செய்து திருமணம் நிச்சயம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாண்டியன் மிகுந்த வேதனை அடைந்தார். காதலியை இனி திருமணம் செய்ய முடியாது என்று கருதிய அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story