‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 5 May 2022 2:42 AM IST (Updated: 5 May 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கூடுதல் மின்மாற்றி தேவை 

விருதுநகா் என்.ஜி.ஓ காலனி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள அத்தியாவசிய மின்பொருட்களை உபயோகப்படுத்த முடியாமல் ெபாதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் டிவி, மிக்சி போன்ற மின்சாதன ெபாருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இப்பகுதியில் கூடுதல் மின்மாற்றி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                            கண்ணன், விருதுநகர். 

குடிநீர் தட்டுப்பாடு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளலூர் பகுதியில் கடந்த ஒருவார காலமாக காவிரி கூட்டுக்குடிநீர் சில நாட்களாக வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள்  குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், மேலூர்.

சேதமடைந்த மின்கம்பம் 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செவ்வாய்பேட்டையிலிருந்து முப்பையூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராமநாதன், ஆா்.எஸ்.மங்கலம். 

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுரை கோச்சடை நட்ராஜ் நகர் மெயின் ரோட்டில் ஆவின் பாலகம் அருகில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் நடந்து செல்பவர்களும் வாகனத்தில் செல்பவா்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். மேலும் கழிவுநீாினால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பாதாள சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                               மணி, மதுைர. 

நோய்தொற்று பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வேப்பங்குளம் கிராமம் மொட்டையசாமி கோவில் தெருவில் கழிவுநீா் கால்வாய் சாியாக அமைக்கப்படாததால் செல்ல வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?            ராமசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

குண்டும், குழியுமான சாலை
 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழை காலங்களில் இந்த சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகு, கீழக்கரை.

அடிப்படை வசதிகள் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் உள்ள  அங்கன்வாடி மையத்திற்கு செல்ல சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மழைக்காலத்தில் இங்குள்ள சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் அங்கன்வாடியை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் மழை காலங்களில் விஷ பூச்சிகள் அங்கன்வாடி மையத்திற்குள் வரும் நிலை உள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து மையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காா்த்திக், வத்திராயிருப்பு. 

வேகத்தடை ேவண்டும்
 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் சிறு, சிறு விபத்துக்கள் நடப்பதால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.        பொதுமக்கள், ஏர்வாடி.

நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று பயமுறுத்துகிறது. பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
வசந்த், சிவகங்கை. 

Next Story