பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் சித்திரை உத்திர திருவிழா கொடியேற்றம்
ராஜாக்கமங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் சித்திரை உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூர்:
நாங்குநேரி அருகே ராஜாக்கமங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் சித்திரை உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை 9.50 மணிக்கு நாங்குநேரி ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமனுஜ ஜீயர் சுவாமிகள் ஆசிேயாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதியம் கும்பாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமி ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மதியம் கும்பாபிஷேக பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருநாளான 11-ந் தேதி சித்திரை உத்திர திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், ருத்திர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் கும்பாபிஷேக பூஜை, மாலை 5 மணிக்கு சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு சாயராட்சை பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு பூத நாதர் சிறப்பு படுக்கை மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 2 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஷ்வரி, அர்ச்சகர்கள் கைலாசபட்டர், அரிகரபட்டர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story