மோட்டார் சைக்கிளில் சென்ற ஊழியரிடம் ரூ.11 லட்சம் பறிப்பு
மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊழியரிடம் ரூ.11 லட்சம் பறிக்கப்பட்டது.
மதுரை,
மதுரையில் உள்ள பெயிண்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் கண்ணன். சம்பவத்தன்று இவர் பல்வேறு இடங்களில் வசூல் செய்த ரூ.11 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அண்ணாநகர் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிளை மறித்து கண்ணனிடமிருந்து பணப்பையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story