கொதிகலன் குழாயில் பழுது சரிசெய்யப்பட்டது:மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
கொதிகலன் குழாயில் பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர்:
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை முதல் இந்த அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. அதேநேரத்தில் பழைய அனல் மின் நிலையத்திலும் 840 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story