சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா பறிமுதல்


சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2022 3:41 AM IST (Updated: 5 May 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சூரமங்கலம்,:
சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை தன்பாத் -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். பொம்மிடி ரெயில் நிலையம் அருகில் சோதனை செய்த போது, ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பையில் சோதனை செய்த போது அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா இருந்த பை யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

Next Story