ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது


ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 5 May 2022 3:45 AM IST (Updated: 5 May 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

பாவூர்சத்திரம்:
ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு நெல்லை-தென்காசி சாலை வழியாக தினமும் லாரிகளில் கருங்கல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்கின்றனர். தற்போது நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் அருகே கேரளாவிற்கு கருங்கல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிரே வந்த அரசு பஸ்சுக்கு வழிவிட முயன்ற போது சாலையின் அருகே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ஜல்லிக்கற்கள் அனைத்தும் சாலையில் கொட்டியது, மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கேரள மாநிலம் கட்டன்காடு பகுதியை சேர்ந்த ஜான் (வயது 42) காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story