மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னல்- சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மொடக்குறிச்சி பகுதியில் மரம் வேரோடு சாய்ந்ததால் மின் தடை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மொடக்குறிச்சி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மொடக்குறிச்சி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சதத்தை தாண்டி வெயிலின் கொடுமை இருக்கிறது. ஒரு சில நாட்கள் இரவு நேரத்தில் மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. ஆனாலும் மழை பெய்த அறிகுறி இல்லாதவாறு வெயில் கொளுத்தியது. இதனால் அனல்காற்று வீசியது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் மொடக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதைத்தொடா்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதில் ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் அய்யன் கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதேபோல் மாத்தூர் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பூந்துறை, சேமூர் வழியாக வாகனங்கள் எழுமாத்தூர் வந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மரங்கள் விழுந்ததில் மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
கோபி- கொடுமுடி
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு 8.45 மணி அளவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கோபி பகுதியில் ஜில்லென்ற குளிர் காற்று வீசியது. இந்த மழை காரணமாக கோபி பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி முதல் பலத்த சூறாவளிக்காற்றுடன் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. பகலில் வெயில் கடுமையாக அடித்தாலும், இரவில் மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story