கோபி அருகே மனைவியை அடித்து-உதைத்ததாக அரசு பஸ் டிரைவர் தாயாருடன் கைது


கோபி அருகே மனைவியை அடித்து-உதைத்ததாக அரசு பஸ் டிரைவர் தாயாருடன் கைது
x
தினத்தந்தி 5 May 2022 4:02 AM IST (Updated: 5 May 2022 4:02 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மனைவியை அடித்து, உதைத்ததாக அரசு பஸ் டிரைவர் தாயாருடன் கைது செய்யப்பட்டார்.

கடத்தூர்
கோபி அருகே மனைவியை அடித்து, உதைத்ததாக அரசு பஸ் டிரைவர் தாயாருடன் கைது செய்யப்பட்டார். 
தகராறு
சத்தி அருகே உள்ள புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 40). இவர் சத்தியமங்கலம் பணிமனை அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வெங்கடேஸ்வரனின் தாய் சரஸ்வதியும் இவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார். 
ெவங்கடேஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 
3 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி வெங்கடேஸ்வரனின் சட்டை பையில் இருந்து வீட்டு செலவுக்காக பணம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன் ஏன் பணம் எடுத்தாய்? என்று கூறி மனைவியை அடித்து உதைத்துள்ளார். அப்போது தாய் சரஸ்வதியும், உறவினர் ரங்கசாமி என்பவரும் சேர்ந்து வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக பாக்கியலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பாக்கியலட்சுமி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கடேஸ்வரன், சரஸ்வதி, ரங்கசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். 

Related Tags :
Next Story