சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு-2 நாட்கள் நடக்கிறது
சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு 2 நாட்கள் நடக்கிறது.
சேலம்:
சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு 2 நாட்கள் நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) தொகுதி-2 மற்றும் 2ஏ முதுநிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ படிக்கும் வட்டத்தின் மூலமாக வருகிற 8-ந் தேதி மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இலவச மாதிரித்தேர்வுகள் சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தகுதி வாய்ந்த...
இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தகுதி வாய்ந்த நபர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story