வாழப்பாடி பகுதியில் 21 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு


வாழப்பாடி பகுதியில் 21 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 4:30 AM IST (Updated: 5 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி பகுதியில் 21 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

வாழப்பாடி:
வாழப்பாடி பேரூராட்சி அம்பேத்கர் நகர், இந்திராநகர், கல்கொத்தி தெரு உள்ளிட்ட பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சசிகலா, புறதொடர்பு பணியாளர் பரமேஸ்வரி, சமூக பணியாளர் ஜெயஷீலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி, புதுப்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ரேணுகாதேவி மற்றும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். இதில் 21 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கியதுடன், மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story