சேலத்தில் மொபட்டில் இருந்து தவறிவிழுந்து 2 பெண்கள் காயம்-வாகனத்தில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீஸ் சூப்பிரண்டு


சேலத்தில் மொபட்டில் இருந்து தவறிவிழுந்து 2 பெண்கள் காயம்-வாகனத்தில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 5 May 2022 4:51 AM IST (Updated: 5 May 2022 4:51 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மொபட்டில் இருந்து தவறிவிழுந்து 2 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும், தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீஸ் சூப்பிரண்டுவை பொதுமக்கள் பாராட்டினர்.

சேலம்:
சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி ரூபாதேவி (வயது 32). இவர் 5 ரோடு அருகே உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தன்னுடன் வேலை பார்த்து வரும் வாழப்பாடி பகுதியை சேர்ந்த கணேசனின் மனைவி தங்கமணி (36) என்பவரை தனது மொபட்டில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் சாரதா கல்லூரி சாலை அருகே சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்ததும் அவர் தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர் காயம் அடைந்த 2 பெண்களையும் அவர் தனது வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story