மண்டை ஓடு, பட்டாகத்தியுடன் சுடுகாட்டில் நின்றபடி வீடியோ வெளியிட்ட வாலிபர்கள் கைது
குரோம்பேட்டை அருகே மண்டை ஓடு, பட்டாகத்தியுடன் சுடுகாட்டில் நின்றபடி வீடியோ வெளியிட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
பட்டாகத்தி மற்றும் மனித மண்டை ஓடுடன் சுடுகாட்டில் நின்றபடி 3 வாலிபர்கள் பின்னணி இசைக்கு ஆடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராமில்’ வைரலானது. போலீஸ் விசாரணையில் அந்த வீடியோ குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் வைத்து, எடுக்கப்பட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக சிட்லபாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 20), ரங்கநாதன்(19), சீனிவாசன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் குடிபோதையில் ‘கெத்து’ காட்டுவதற்காக இதுபோல் வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story