திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49 மற்றும் 50 இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு படையின் பொறுப்பு பேராசிரியர் ஜான்சிராணி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் கலந்து கொண்டு “சாலை பாதுகாப்பு நம் வாழ்வின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் சாலை விதிகள் குறித்தும், விபத்து நடைபெறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.
பின்னர், சாலை பாதுகாப்பு படை மாணவிகளுக்கு தொப்பி, விஷில் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வேதியல்துறை மாணவிகள் அந்தோணி சுஜிதா, நிவேதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாந்தா நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story