டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு வியாழக்கிழமை நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.
சென்னை டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவன மேலாளர் ஆதி நாராயண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘மாணவர்கள் மனிதவள நிர்வாகிகள் சந்திப்பை தங்கள் துறை சார்ந்த முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் கடின உழைப்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும்’’ என்று கூறினார்.
ஈரோடு எஸ்.எஸ்.நடராஜன் அன்கோ நிறுவன திட்ட பொறியாளர் ராஜா ரவிவர்மன், சென்னை டேட்டா பேட்டன்ஸ் நிறுவன மூத்த மனிதவள அதிகாரி உதயகுமார், புதுச்சேரி சுயர் சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவன துணை பொது மேலாளர் கீதாஞ்சலி, சென்னை சன் மீடியா துணை மேலாளர் நீல பிரதீப், பெங்களூர் மிஸ்ட்ரல் சொலுசன்ஸ் தொகுதி முன்னணியாளர் ராஜேசுவரி, நெல்லை ஐகனியோ டெக்னாலஜிஸ் இயக்குனர் ராஜசேகர், கோவை எக்லைவ் டெக் நிறுவன கல்வி உறவு மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பேசினர்.
இந்தியாவின் 8 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவளத்துறை தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளின் துறைசார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி பொன்னுகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story