தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஆபத்தான பள்ளம்
கார்மல் பள்ளி அருகே ஏ.ஆர்.கேம்ப் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த பல மாதங்களாக ஒரு பள்ளம் ஏற்பட்டு, பாதாள குழியாக தென்படுகிறது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். தற்போது பள்ளத்தில் பெரிய பாறாங்கற்களை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்றணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.
மின்கம்பத்தில் படர்ந்த கொடி
குளச்சல் நகராட்சி 17-வது வார்டில் குழந்தை ஏசு காலனி உள்ளது. இந்த காலனியில் அங்கன்வாடி அருகில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தில் படர்ந்த கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹீர், குளச்சல்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
அழகப்பபுரத்தில் கீழபஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் எதிேர மெட்ரிக் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின், அழகப்பபுரம்.
காத்திருக்கும் ஆபத்து
கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பெட்டி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மூடி தொங்கிய நிலையில் குழந்தைகள் எளிதாக தொடும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுவிட்ச் பெட்டியை உயரத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்ரமணியன், கைலாஷ்கார்டன்.
சாலையை சீரமைக்க வேண்டும்
கிள்ளியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வேங்கோட்டில் இருந்து தாணிகுழிவிளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். தற்போது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனிஷ், வேங்கோடு.
Related Tags :
Next Story