குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஓவிய கண்காட்சி


குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஓவிய கண்காட்சி
x
தினத்தந்தி 5 May 2022 7:44 PM IST (Updated: 5 May 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் நடந்த ஓவிய கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

குன்னூர்

குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை தனியார் மகளிர் கல்லூரியில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

சுமார் 500-க்கும் மேற்ப்பட்ட வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது‌.இதில் குறிப்பாக இயற்கை, மனித வாழ்வியல், பசுமை மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் தத்ரூபமாக வரையபட்டிருந்தது. இந்த ஓவிய கண்காட்சியில் மாற்று திறனாளியான கார்த்திகேயன் என்பவர் வரைந்த ஓவியங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

மாணவ -மாணவிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு ஓவியங்களை கண்டு களித்து புகைப்படங்கள் எடுத்து சென்றனர். தங்களுக்கு பிடித்த ஓவியங்களை அதற்கான விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

Next Story