பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் மராட்டிய முதல்-மந்திரியாக வேண்டும் என விரும்புகிறேன்- ராவ்சாகிப் தான்வே பேச்சு
பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் மராட்டிய முதல்-மந்திரியாக வேண்டும் என விரும்புவதாக மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
மும்பை,
பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் மராட்டிய முதல்-மந்திரியாக வேண்டும் என விரும்புவதாக மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
பிராமண முதல்-மந்திரி
ஜால்னாவில் பிராமணர் சமூகத்தினர் சார்பில் பரசுராம் ஜெயந்தி விழா நடந்தது. இதில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே கலந்து கொண்டார். அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பிராமணர்களுக்கு அதிக முக்கியதுவம் தர வேண்டும் என ராவ்சாகேப் தன்வேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து ராவ்சாகேப் தன்வே விழாவில் பேசியதாவது:-
பிராமணர்களை மாநகராட்சி கவுன்சிலர்களாகவோ அல்லது நகர்மன்ற தலைவர்களாகவோ மட்டும் பார்க்க நான் விரும்பவில்லை. ஒரு பிரமாணர் இந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருப்பதை பார்க்க விரும்புகிறேன். அரசியலில் அதிக சாதி பாகுபாடு வந்து உள்ளது. ஆனால் அதை புறக்கணிக்க முடியாது. ஆனால் தலைவர் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து செல்பவராக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அஜித்பவார் பதில்
ராவ்சாகிப் தான்வே பேச்சு குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், "145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் திருநங்கையோ அல்லது எந்த ஒரு சமூகம், மதத்தை சேர்ந்தவரோ, அல்லது ஒரு பெண்ணோ யார் வேண்டுமானால் முதல்-மந்திரி ஆகலாம்" என்றார்.
Related Tags :
Next Story