கொடைக்கானலில் சாலையில் உலா வந்த காட்டெருமை சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்


கொடைக்கானலில்  சாலையில் உலா வந்த காட்டெருமை சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 8:03 PM IST (Updated: 5 May 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சாலையில் உலா வந்த காட்டெருமையால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, காட்டுப்பன்றிகள் நகருக்குள் புகுந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி இன்று மாலை 6½ மணி அளவில் கொடைக்கானல் அண்ணாசாலையில், ராட்சத காட்டெருமை ஒன்று கம்பீரமாக உலா வந்தது. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலர் அருகே உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டெருமை, எந்தவித அச்சமும் இன்றி சாலை வழியாக சென்று அருகே இருந்த போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாரும், வனத்துறையினரும் சேர்ந்து அங்கிருந்த தனியார் தோட்டத்துக்குள் விரட்டினர். எனவே கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story