போக்குவரத்துக்கு இடையூறான கருவேல மரங்கள் அகற்றம்
கீழப்பூதனூர் ஊராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறான கருவேல மரங்கள் அகற்றம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சிக்குட்பட்ட தென்னமரக்குடி, பெருநாட்டான் தோப்பு, மேலப்பூதனூர் ஆகிய பகுதிகளில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையோரம் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் கருவேல மரங்கள் மின்கம்பிகளை உரசிக்கொண்டு இருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த கருவேல மரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, வார்டு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கருவேல மரங்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story