உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்


உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 5 May 2022 8:19 PM IST (Updated: 5 May 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய் திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது ஊஞ்சலில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story