ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச்சென்ற சுகாதார ஆய்வாளர் மயங்கி விழுந்து சாவு
கிணத்துக்கடவு அருகே ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச்சென்ற போது மயங்கி விழுந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச்சென்ற போது மயங்கி விழுந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுகாதார ஆய்வாளர்
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் நீலகிரி மாவட்டம் தங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி விடுப்பில் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென செந்தில்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்தநிலையில் சம்பவத்தன்று கோவில் பாளையத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக செந்தில்குமார் சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story