கோவில் திருவிழாவில் மைக்செட்டை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் மைக்செட்டை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 24). மைக் செட் வைத்து உள்ளார். இவர் நேற்று பிள்ளையார்நத்தத்தில் நடந்த முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மைக் செட் போட்டு கொண்டிருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த கணேசன் என்பவர் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கணேசனின் உறவினர்கள் செந்தில்குமார்(25), பாலமுருகன்(24), விஜயகுமார்(26) மற்றும் சிலர் கும்பலாக வந்து கட்டை மற்றும் பல்வேறு ஆயுதங்களால் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் மைக்செட் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதை மணிவண்ணன், அவரது தந்தை சுப்புராஜ், தங்கை மீனா ஆகிய 3 பேரும் தடுத்தனர். அப்போது அவர்கள் 3 பேரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், பாலமுருகன், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story