தினத்தந்தி செய்தி எதிரொலி திண்டுக்கல்-தி.வடுகப்பட்டி இடையே மீண்டும் பஸ் சேவை


தினத்தந்தி செய்தி எதிரொலி  திண்டுக்கல்-தி.வடுகப்பட்டி இடையே மீண்டும் பஸ் சேவை
x
தினத்தந்தி 5 May 2022 9:01 PM IST (Updated: 5 May 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியால் திண்டுக்கல்-தி.வடுகப்பட்டி இடையே மீண்டும் டவுன் பஸ் இயக்கப்பட்டது.

கோபால்பட்டி:

 திண்டுக்கல்லில் இருந்து கோபால்பட்டி அருகே உள்ள தி.வடுகப்பட்டி கிராமத்துக்கு, பல ஆண்டுகளாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தி.வடுகப்பட்டி அருகே சாலையோரம் இருந்த புளிய மர கிளைகள் பஸ்சின் மீது உரசுவதாக கூறி பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்கிளைகள் வெட்டப்பட்டன. மேலும் இன்று காலை திண்டுக்கல்-தி.வடுகப்பட்டி இடையே அரசு டவுன்பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த பஸ்சை ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.


Next Story