போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் காங்கிரசாரின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப தயாராக இல்லை; மந்திரி ஆர்.அசோக் பேட்டி


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் காங்கிரசாரின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப தயாராக இல்லை; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 5 May 2022 9:12 PM IST (Updated: 5 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் காங்கிரசாரின் குற்றச்சாட்டை மக்கள் நம்ப தயாராக இல்லை என மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முறைகேட்டை அத்துறை மந்திரி அரக ஞானேந்திரா தான் வெளியே கொண்டு வந்தார். இதற்காக அவரை காங்கிரசார் பாராட்ட வேண்டும். அதை விடுத்து அரசு மீது சேற்றை வாரி இறைப்பது சரியல்ல. தேர்தல் மாயாஜாலம் செய்ய காங்கிரசாருக்கு இன்னும் நேரம் உள்ளது. 

இரட்டை என்ஜின் அரசின் நல்ல செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரசார் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை. முதல்-மந்திரி ஆவேன் என்று மந்திரி அஸ்வத் நாராயண் எங்கும் கூறவில்லை. ஆனாலும் காங்கிரஸ் தலைவர்கள் அவரது பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டுவது சரியல்ல. ஆனால் ஆதாரங்கள் இல்லை. அந்த முறைகேடுகள் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் உண்மைகள் வெளியே வரும்.

  தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் விட மாட்டோம். எங்கள் கட்சி விவகாரங்களை பார்த்து கொள்ள கட்சி மேலிடம் உள்ளது. குமாரசாமி தனது கட்சி விஷயங்களை மட்டும் கவனித்து கொள்வது நல்லது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் குடும்ப அரசியல் உள்ளது.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story