பெங்களூரு அருகே கேட்பாரற்று கிடந்த பெட்டியால் வெடிகுண்டு பீதி


பெங்களூரு அருகே கேட்பாரற்று கிடந்த பெட்டியால் வெடிகுண்டு பீதி
x
தினத்தந்தி 5 May 2022 9:32 PM IST (Updated: 5 May 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மெஜஸ்டிக் அருகே கேட்பாரற்று கிடந்த பெட்டியால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டுள்ளது

பெங்களூரு: பெங்களூரு மெஜஸ்டிக் அருகே காந்திநகர், 5-வது மெயின் ரோட்டில் இன்று மதியம் ஒரு பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பெட்டிக்குள் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி உருவானது. இதுபற்றி உப்பார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அங்கு வந்தனர். 

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்புடன் அந்த பெட்டியை திறந்து பார்த்தார்கள். அப்போது அதற்குள் துணிகள், சில பொருட்கள் தான் இருந்தது. வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தார்கள். அந்த பெட்டியை அப்பகுதியில் வைத்து சென்றவர் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேட்பாரற்று கிடந்த பெட்டியால் அப்பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Next Story