அதிக பால் தரும் பசுக்கள் தேர்வு முகாம்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிக பால் தரும் பசுக்கள் தேர்வு முகாம் நடந்தது.
வேலூர்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை இணைந்து தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அதிக பால் தரும் பசுக்கள் தேர்வு செய்யும் முகாம் காட்பாடியை அடுத்த செம்பராயநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு துறை வேலூர் மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உமா, ஜெயஸ்ரீ, ராஜேஷ், பிருந்தா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அந்துவன், டாக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் கொண்ட குழுவினர் சிறந்த பசுக்களை தேர்வு செய்தனர்.
ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பசுக்களை முகாமிற்கு கொண்டு வந்திருந்தனர்.இந்த முகாம் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது:-
கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் நலனுக்காக அவர்கள் வளர்க்கும் பசுக்களுக்கு செயற்கை முறையில் கருமாற்று தொழில் நுட்பத்தின் கீழ் கருத்தரிப்பு செய்யப்படுகிறது. அதாவது அதிக பால் தரும் பசுக்களை கண்டறிந்து, அந்த பசுக்களில் இருந்து கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டு அதை பிற பசுக்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்படுகிறது. அதன் மூலம் அதிக பால் திறன் தரும் கன்றுகள் கருவாகி பின்னர் கன்றுக்குட்டியாக பிறக்கும். அந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து அதிக பால் தரும் பசுக்களாக உருவாகும். இதன் மூலம் விவசாயிகள் லாபம் அடைவார்கள். இந்த தொழில்நுட்பம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story