ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி
ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் ரிதன்யா (வயது 17) பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடமும், மருத்துவரிடமும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மாணவி ஆர்வத்துடன் தேர்வை எழுதினார். ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவியை ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story