கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் போராட்டம் நடத்தினார்.
கிருஷ்ணகிரி:-
சூளகிரி அருகே உஸ்தலப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது30). இவரது மனைவி துளசி (27) இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தையும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். துளசி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் குழந்தையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்களது பெண் குழந்தைக்கு கண்ணில் நீர் வழிந்த வண்ணம் இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது குழந்தைக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறினர். கூலி வேலை செய்யும் எங்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லை. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று குழந்தைக்கு ஊசி போட்டு வருகிறோம். அங்கு சென்று வர கூட வசதியில்லாததால் சிரமப்பட்டு வருகிறோம். தமிழக அரசு குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story