79 மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது


79 மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 5 May 2022 10:19 PM IST (Updated: 5 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 தேர்வு
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு 31-ந் தேதி வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில், 106 அரசு மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவிப்பெறும் பள்ளி, 79 மெட்ரிக் பள்ளி என மொத்தம் 186 பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரத்து 158 மாணவர்கள், 11 ஆயிரத்து 321 மாணவிகள் என 22 ஆயிரத்து 479 மாணவ மாணவியர்கள் 79 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
கண்காணிக்க...
மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதிகளும், தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு பணிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க, 138 பறக்கும் படை அலுவலர்கள், 82 முதன்மை கண்காணிப்பாளர்கள், 89 துறை சார்ந்த அலுவலர்கள், 31 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் தேர்வு குறித்த அச்சமின்றி தைரியமுடன் தேர்வுகள் எழுத வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Next Story