ரெயில்வே தேர்வை தமிழகத்திலேயே நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ரெயில்வே தேர்வை தமிழகத்திலேயே நடத்தக்கோரி சின்னசேலம் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சின்னசேலம்,
ரெயில்வே பணிக்கான தேர்வு எழுத தமிழக மாணவர்கள் வடமாநிலம் செல்ல வேண்டும் என்ற ரெயில்வே துறையின் அறிவிப்பைக் கண்டித்தும், ரெயில்வே தேர்வை தமிழகத்திலேயே நடத்தக்கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து சின்னசேலம் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் மதியழகன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரெயில்வே தேர்வை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தமிழ்வழிக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் சின்னப்பதமிழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாசறை பாலு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வட்ட செயலாளர் ஜான்பாஷா, வக்கீல் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி சின்னசேலம் ரெயில்வே நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜலட்சுமி, திருமேனி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பிரியா, புவனேஸ்வரி உள்ளிட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story