மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடலூர்,
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மக்கள் அதிகாரம் வடலூர் கிளை செயலாளர் ஆனந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.ராஜி, மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் கமாலுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடலூர் நிர்வாகி ஜோதிமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story