பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சங்கராபுரத்தில், தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சங்கராபுரத்தில், தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே ஒன்றிய, நகர தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுதாகரன், மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நகர முன்னாள் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், கழக உயர்மட்டக்குழு உறுப்பினருமான எல். வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், சங்கராபுரம் தே.மு.தி.க. முன்னாள் மாவட்ட நிர்வாகி மனைவி மகேஸ்வரி தற்கொலைக்கு காரணமான குற்றவாளியை கைது செய்யக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, ஒன்றிய பொருளாளர் தண்டபாணி, துணை செயலாளர்கள் இளங்கோவன், ஜெயகாந்தன், நா.கோவிந்தன், மாணவரணி செயலாளர் கவுதமன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story