தூக்குப்போட்டு கணவன் தற்கொலை


தூக்குப்போட்டு கணவன் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 10:42 PM IST (Updated: 5 May 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

பரமக்குடி, 
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா (வயது19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (19) என்பவரும் ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். தற்போது ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வெண்ணிலா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story