கடலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


கடலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 10:45 PM IST (Updated: 5 May 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர், 

கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம் மிகுந்த மனவேத னையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் பழனி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story