தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல்
தர்மபுரி நகராட்சி- 5 பேரூராட்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தர்மபுரி:-
தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தி.மு.க. கிளை நிர்வாகிகளுக்கும்,, 2-வது கட்டமாக நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கும் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 3-வது கட்டமாக நகராட்சி, பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தர்மபுரி நகராட்சி மற்றும் அரூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், 3 துணை செயலாளர்கள் மற்றும் 2 மாவட்ட பிரதிநிதிகள் ஆகிய பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரசேகர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். ஏராளமானோர் விருப்ப மனுக்களை கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், காசிநாதன், சுருளிராஜன், கனகராஜ், ராஜா, ரவி, அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, சக்திவேல், குமார், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story