அரசு பள்ளியில் அரியவகை மூலிகை தோட்டம்
அரசு பள்ளியில் அரியவகை மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மொரப்பூர்:-
மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரியவகை மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மூலிகை தோட்டத்தில் பூனை மீசை, அமுக்கிரா கிழங்கு, ஈஸ்வரமூலி, சித்தரத்தை, பேரரத்தை, நன்னாரி, ஆடாதொடா, ஆடுதீண்டாப்பாளை, சங்கங்குப்பி, திருநீற்றுப்பச்சிலை, எலுமிச்சைப்புல், நோனி, கார்போகரிசி, வெட்டிவேர், சிறுகுறிஞ்சான், தண்ணீர் விட்டான், தழுதாழை, தாளிப்பனை, ஆகாச கருடன், நாகமல்லி, பவளமல்லி, வசம்பு, குறிஞ்சி, வில்வம், மிருக சஞ்சீவி, பிரம்ம கமலம், சீந்தில் உள்பட 135-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகள் தோட்டத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூலிகை தோட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செல்வம் வழிகாட்டுதலில் பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜெ.மணியின் தீவிர முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை தோட்டத்தை ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர்.
Related Tags :
Next Story