பிளஸ்-2 தேர்வை 10 ஆயிரத்து 395 மாணவ- மாணவிகள் எழுதினர்


பிளஸ்-2 தேர்வை 10 ஆயிரத்து 395 மாணவ- மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2022 10:55 PM IST (Updated: 5 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10 ஆயிரத்து 395 மாணவ- மாணவிகள் எழுதியதாக கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10 ஆயிரத்து 395 மாணவ- மாணவிகள் எழுதியதாக கலெக்டர் லலிதா கூறினார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
மயிலாடுதுறை தியாகி. ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்த மையத்தை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது.  
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,042 மாணவர்களும், 5,353 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
அடிப்படை வசதிகள்
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தனிதேர்வர்களுக்கு 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 53 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் மாணவர்கள் தேர்வுக்கு வர போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story