சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 5 May 2022 11:01 PM IST (Updated: 5 May 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை போலீஸ்சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை அரக்கோணம் ஆகிய 2 உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 போக்குவரத்துக் போலீஸ் நிலையங்கள், 2 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகள் என மொத்தம் 24 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆயுதப்படையுடன் சேர்த்து தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், 2-ம் நிலை காவலர்கள் என மொத்தம் 640 போலீசார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்கள் 444 பேரை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி மற்றும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்வுக்கு தயாராகும், காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தை சேர்ந்த விருப்பம் உள்ளவர்களுக்கு, எளிதாக தேர்வினை எதிர்கொள்வதற்கான, பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில்  தொடங்கப்பட்டது. 

இவ்வகுப்புகள் காவல்துறையினர் மற்றும் அரசு ஆசிரியர்கள் மூலமாக நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பினை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் தீபா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்

Article-Inline-AD

ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story