சிரசு திருவிழா பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என்று மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என்று மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வருகிற 11-ந் தேதியும், கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா 14-ந் தேதியும், கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் 15-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமரா
கடந்த மாதம் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவின்போது நெரிசலில் சிக்கி இருவர் பலியானது, தஞ்சாவூர் அருகே மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது, நாகப்பட்டினத்தில் தேரில் சிக்கி ஒருவர் பலியானது போன்ற சம்பபவங்கள் தொடராமல் இருக்கும் பொருட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. பிரேம்ஆனந்த் சின்கா, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் உத்தரவின்பேரில் இந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாவை காண வரும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்வது குறித்தும், நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்களும், பொதுமக்களும் கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தேர் திருவிழாவின் போதும், சிரசு திருவிழாவின் போதும் அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் முன்னேற்பாடுகள் குறித்தும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story