லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே காட்டுபிரிங்கியம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜா(வயது 40). லாரி டிரைவரான இவர் திருமணமாகி கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், இதனால் மனக்கஷ்டத்தில் ராஜா இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வி.கைகாட்டியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே ராஜா பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ராஜாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு ராஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜாவின் தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story