பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 5 May 2022 11:10 PM IST (Updated: 5 May 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெய்த பலத்த மழைக்கு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

தேனி: 

தேனியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தேனி பழைய டி.வி.எஸ். சாலையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் நள்ளிரவில் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் பழமையானது. அதன் உள்புறம் மாணவர்களுக்கான கழிப்பிடம் உள்ளது. நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுச்சுவரின் மற்றொரு பகுதி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. உடனடியாக நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சுவரையும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். 

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் உடனடி நடவடிக்கையாக அந்த எஞ்சிய சுற்றுச்சுவரும், பழமையான கழிப்பிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

Next Story