கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத கடைகள்

கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத கடைகள்
x
தினத்தந்தி 5 May 2022 11:11 PM IST (Updated: 5 May 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் வாரச்சந்தையில் ரூ.1 கோடியில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருக்கும் கடைகளை விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோளிங்கர்

சோளிங்கர் வாரச்சந்தையில் ரூ.1 கோடியில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருக்கும் கடைகளை விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.1 கோடியில் புதிய கடைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் நகராட்சியில் சித்தூா் சாலையில் வாரசந்தை அமைந்துள்ளது. இந்த வாரசந்தை புதன் கிழமை அன்று செயல்படும். இங்கு சுமாா் ரூ.1 கோடி மதிப்பில் 50 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 5 கடைகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 109 கடைகள் வியாபாரிகளின் பயன்பாட்டிற்க்கு தயார் நிலையில் உள்ளது.

கொரோனா பரவல் தடை காரணமாக, கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் கடைகள் வியாபாரிகளுக்கு ஏலம் விடாமல் நகராட்சி நிா்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் வாரசந்தை வியாபாரிகள் சித்தூா் சாலையில், சாலையின் ஓரம் கடைவைத்து வியாபாரம் செய்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் தொடா்கின்றன.

ஒப்படைக்க வேண்டும்

மேலும் வாரசந்தைக்கான இடத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்றி வாரசந்தை கடைகளை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஒதுக்கி தருமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், சோளிங்கா் நகராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Next Story