தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்
அரியலூர் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அரியலூர்-திருச்சி சாலையின் ஓரத்தில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுளள்து. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வந்து வாகன ஓட்டிகளின் மேல் விழுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
சிவகுகன், அரியலூர்.
அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் எல்லைக்குட்பட்ட நெடுவாசல் ரோடு பார்க்கவன் நகர் பகுதியில் சுமார் 25 வீடுகள் உள்ளன. இங்கு தெரு விளக்குகள் மற்றும் சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே வர பெரிதும் பயப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகள் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அருண், பார்க்கவன்நகர், பெரம்பலூர்.
குடிநீர் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் உடனடியாக பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இன்னாசிமுத்து, ஆவூர், புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், குருங்களூர் 3-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருவிளக்குள் சரிவர எரியவில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள ஒரு பாலம் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
மோகன், குருங்களூர், புதுக்கோட்டை.
பயணிகளுக்கு இடையூறாக நிற்கும் ஆட்டோக்கள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக கரூர் மற்றும் திருச்சி சென்று வர வேண்டுமானால் கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து தான் ெசல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான வாடகை ஆட்டோ, வேன்கள் நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என ஆட்டோ, வேன்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரம்யா, கிருஷ்ணராயபுரம், கரூர்.
Related Tags :
Next Story