மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 11:16 PM IST (Updated: 5 May 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்
சி.ஐ.டி.யு.வின் பெரம்பலூர் மாவட்ட மதுபான (டாஸ்மாக்) கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மதுபான கிடங்கில் சுமை தூக்கும் எங்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story