தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகளுக்கு இடையூறாக நிற்கும் ஆட்டோக்கள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக கரூர் மற்றும் திருச்சி சென்று வர வேண்டுமானால் கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து தான் ெசல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான வாடகை ஆட்டோ, வேன்கள் நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என ஆட்டோ, வேன்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரம்யா, கிருஷ்ணராயபுரம், கரூர்.
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கரூர் மாவட்டம் ஓலப்பாளையம், கணபதிபாளையம், குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ெதாட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து காங்கிரீட் சிெமண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் தொட்டியில் அதிக தண்ணீர் நிரப்பும் போது எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஓலப்பாளையம், கரூர்.
Related Tags :
Next Story