முளைப்பாரி-மஞ்சள் நீராட்டு விழா
கம்பம் கவுமாரியம்மன் கோவில் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
கம்பம்:
கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி அக்னிசட்டி, கரகம், ஆயிரங்கண் பானை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைத்து சமுதாயத்தினர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கவுமாரியம்மனை பல்லக்கில் வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட மஞ்சள் நீரை இளைஞர்கள் எடுத்து ஒருவருக்கொருவர் ஊற்றினர். அம்மன் ஊர்வலம் கவுமாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி காளவாசல் தெரு, வ.உ.சி. திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, வேலப்பர் கோவில் தெரு, பழைய பஸ்நிலையம் வழியாக கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story