பொங்கல் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா பதனக்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. காப்பு கட்டுதலுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற்ற இந்த கோவில் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மா விளக்கு ஏற்றுதல், அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, அம்மன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளையொட்டி அம்மன் கரகம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பவனி வருதலும் அம்மன் கரகம் மலையேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை கோவை பெங்களூரு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதனக்குடியை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் வந்திருந்தனர்.இதில் பதனக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story