தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 11:26 PM IST (Updated: 5 May 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி: 

போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் குமார் கட்டிட வேலையில் ஈடுபட்டபோது கீழே தவறி விழுந்து முதுகில் காயம் ஏற்பட்டது. அதன்பின்பு அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்நிலையில் நேற்று வீட்டில் சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story