தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 5 May 2022 11:28 PM IST (Updated: 5 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அம்மன்குடியில் இருந்து கொளக்குடி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜா, தொட்டியம், திருச்சி.

எரியாத மின்விளக்கு
திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் பிராட்டியூர் ராஜ்நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கடந்த 3 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்பவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருத்திகா, பிராட்டியூர், திருச்சி.

பள்ளி வளாகத்தில் ஆபத்தான மரங்கள் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அதவத்தூர் பஞ்சாயத்து, கொய்யாத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 2 வேப்பமரங்கள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் பள்ளி கட்டிடத்தில் விழும் நிலையில் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்ந்த மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கொய்யாத்தோப்பு , திருச்சி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், பூந்தோட்டம் தெருவில் அரசு சொந்தான இடத்தில் ஏராளமான குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி.

மின்தடையால் அவதி
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழவாளடியில் தினமும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் தூக்கம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கீழவாளடி, திருச்சி.


விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
திருச்சி அரசு ஆஸ்பத்திரி விபத்து மற்றும் உயர் மருத்துவ சிகிச்சை பிரிவு முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் மூடி சேதமடைந்த நிலையில், தடுப்புகள் வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த இடத்தில் உள்ள அபாயகரமான மூடியை சீரமைக்கவும், அதில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரகாஷ், திருச்சி

திறக்கப்படாத சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில் சுமார் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாக மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
பொதுமக்கள், கோட்டப்பாளையம், திருச்சி. 


Next Story